மயிலாடுதுறை காவிரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று நான்காம் கால யாக சாலை பூஜை பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது.
தொடர்ந்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கர்ப்ப கிரகத்தில் அம்பாளுக்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது மகாதீபாரதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்