in

தென்காசி தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிப்பு

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை – குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிப்பு.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தன் காரணமாக ஐந்தருவியிலும் குற்றாலம் மெயின் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .

What do you think?

நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய குளத்தின் நடுவே கிணறு வெட்ட அனுமதி வழங்கக் கூடாது

தமிழகத்தில் மட்டும்தான் குற்றங்கள் இல்லாத பள்ளிகள் உள்ளது