in

திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட கழுவமுள்ளிதெரு, மேட்டுத்தெருவை இணைக்கும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்

திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட கழுவமுள்ளிதெரு, மேட்டுத்தெருவை இணைக்கும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் நகர்மன்ற உறுப்பினர்கள் நகரமன்ற கூட்டத்தில் கோரிக்கை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் தீண்டாமை உறுதிமொழி வாசித்து தீர்மானங்களை படித்தார்.

கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய நகர் மன்ற கவுன்சிலர்கள் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி செல்லும் சாலை குறிப்பாக ரயில்வே கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ரயில்வே கேட் கழுவமுள்ளி தெரு வழியாக மேட்டு தெருவை இணைக்கும் பாதையில் தார்சாலை அமைத்தும் ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்ல முடியவில்லை ஆகையால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் அதற்கான தீர்மானத்தை நகர் மன்றத்தில் ஏற்றி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய மருத்துவமனையில் இருந்த இடத்தில் சமூக விரோதிகள் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் அந்த இடத்தில் வார சந்தை அமைத்து நகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் திருத்துறைப்பூண்டி நான்காவது வார்டு கழுவமுள்ளி தெருவில் உள்ள கீழ் குமிழியை சரி செய்து மழை நேரத்தில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரவு நேரங்களில் வயல்களில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் வருவதால் நவீன இயந்திரங்கள் கொண்டு சாக்கடைகள் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் நகராட்சிப் பகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடிகள் உள்ளதால் அதை வார்டு வாரியாக சரி செய்ய வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை நகர மன்ற உறுப்பினர்கள் வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில்… நகராட்சி பகுதியில் மழைக்கால முன்னோர்ப்பாடுகள் எல்லாம் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கவுன்சிலர் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி உள்ளதாகவும் ஒரு சில பணிகள் ஒப்பந்த புள்ளி கூறப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும். ஒரு சில பணிகள் விரைவில் துவங்க உள்ளதாகவும் அனைத்தும் விரைந்து படிபடியாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.

கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் நகராட்சி ஆணையர் பொறியாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் .

What do you think?

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா

அருப்புக்கோட்டையில் வருமான வரி துறை சார்பில் முன்கூட்டியே வரி செலுத்துவதன் முக்கியத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி