in ,

புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு

புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு

 

புவனகிரி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு கொட்டி தீர்த்த கன மழையில் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் கொட்டி தீர்த்த கன மழைக்கும் இடையே வெகு விமர்சியாக நடைபெற்றது பல்வேறு பிஸ்கட் பாக்கெட்டுக்கள் கொண்டு மாலையாக அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் கையில் பால விநாயகருடன் கோவிலை சுற்றி கொட்டும் மழையில் தாலாட்டுடன் வலம் வந்து ஊஞ்சலில் அமர்ந்தாள்.

பின்னர் பம்பை ஒலி முழங்க தாலாட்டு பாடலுடன் ஊஞ்சலில் அம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை வழிபட்டு சென்றனர்.

பிஸ்கட்டை மாலையாக கொண்டு கையில் பால விநாயகருடன் காட்சி தந்த அங்காளம்மன் பால விநாயகருக்கு பிஸ்கட் ஊட்டும் நிகழ்வாக இன்றைய ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

What do you think?

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் – 10 பயணிகளுக்கு டிக்கெட் எடுத்து ஜாலி பயணம்