காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணியசாமி ஆலயத்தில் வெள்ளி ரத உற்சவம்
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணியசாமி ஆலயத்தில் வெள்ளி ரத உற்சவம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கந்தபுராணம் அறங்கேரறிய திருத்தலமாக விளங்கக்கூடிய குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம்
அந்த வகையில் நடைபெற்ற உற்சவத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதனை தொடர்ந்து முருக பெருமானுக்கு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது இவ்விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் பேரருளை பெற்று சென்றனர்