in

Goat படத்திற்கு boat யில் ப்ரோமோஷன் செய்து அசத்திய கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள்

Goat படத்திற்கு boat யில் ப்ரோமோஷன் செய்து அசத்திய கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய goat திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக தமிழக முழுவதும் விஜய் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் goat படத்திற்கு புது விதமான ப்ரோமோஷன் செய்தனர்.

கன்னியாகுமரி வாவதுறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய நாட்டுப் படகு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் goat படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி கடலில் மீன் பிடிக்க செல்ல வழி அனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சிவா தலைமை தாங்கினார். கன்னியாகுமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜோ முன்னிலை வகித்தார். பேரூர் செயலாளர் ஹெல்மன், துணைச் செயலாளர் ஷான், பொருளாளர் ராஜா, பெலா, அணில்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுவிதமாக படகில் பட பிரமோஷன் செய்த கன்னியாகுமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் செயல் அப்பகுதி மீனவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

What do you think?

கேரள நடிகர்கள் தவறு செய்துள்ளார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது அவர்களது கடமை மதுரையில் நடிகர் சரத்குமார் பேட்டி

நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு ஏன் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என தெரியவில்லை என மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி