in

திருச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு விடுதியில் பாலியல் துன்புறுத்தல் – தலைமை ஆசிரியரும் ,மகனும் கைது

திருச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு விடுதியில் பாலியல் துன்புறுத்தல் – தலைமை ஆசிரியரும் ,மகனும் கைது

நீதிபதியிடம் ஆஜர்படுத்த முடியாததால் 20 கிலோ மீட்டர் தூரம் போக்சோ குற்றவாளிகளை வைத்து ஊரை சுற்றிய காவல் துறை – அசராமல் போலீஸ் வாகனத்தை பின் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள்

திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி விடுதியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, மருத்துவர் சாம்சன் mbbs (31) என்பவர் மீது கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாம்சனின் தாயார் சகாய ராணி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் உதவி மையம் 1098ல் பெறப்பட்ட தகவலின் பேரில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமையாசிரியர் சகாய ராணி, மகன் மருத்துவர் சாம்சன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மருத்துவர் மீது 9 ,10 ,11 ,12 போக்சோ சட்டப்பிரிவு, ஐபிசி 452, 323 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் மீது குற்றத்தை மறைத்தல் 21 சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை அழைத்து வந்தனர். அங்கு நேரமானதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட முடியாமல் போனது. மகிளா நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்த போலீசார் முற்பட்டனர் வீட்டில் ஆஜர்படுத்தப்பட முடியாததால் கோர்ட் வளாகத்தில் ஒரு மூலையில் போலீஸ் வாகனத்தை கொண்டு போய் நிறுத்தி வெகு நேரம் காத்திருந்தனர்.

இருவரையும் திருச்சி நீதிமன்றத்திற்கு உள்ளே மகிளா நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்த வந்த பொழுது மகிளா நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் இருப்பதால் தொடர்ந்து விரட்டி படம்பிடிக்க பத்திரிக்கையாளர்கள் முயற்சி செய்தனர். உதவி ஆணையர் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விரட்டி ஏன் படம் எடுக்கும் முயற்சி செய்கிறீர்கள் என்று உதவி ஆணையர் கேட்டபோது நீங்கள் முகத்தை மூடி ஏன் இப்படி அங்கும் இங்கும் ஓட வைக்கிறீர்கள் என்று கேட்டனர்.

இதனை தொடர்ந்து மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் வளாகத்திலிருந்து இருவரையும் எங்கு அழைத்து செல்கிறோம் என்று சொல்லாமல்
நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் வாகனத்தை தபால் நிலையம் சாலை, டிவிஎஸ் டோல்கேட்,பழைய பால் பண்ணை,காவிரி ஆறு, திருவானைக்காவல் செக் போஸ்ட், மாம்பழச்சாலை, காவிரி ஆறு பாலம் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக
ஊரை சுற்றி செய்தியாளர்களுக்கு அல்வா கொடுக்கலாம் என நினைத்து
போலீஸ் வாகனத்தை ஓட்டினர். இல்லை அமர்ந்திருந்த இரண்டு பேரும் தலையில் துணியை மூடிக்கொண்டு முக்காடு போட்டு குனிந்து இருந்தனர் போலீசாதனத்தின் பின்புறத்தில் இருந்த தலைமையாசிரியர் பெண் காவலர் மடியிலேயே படித்துக் கொண்டார்.

பத்திரிக்கையாளர்கள் பத்துக்கு மேற்பட்டவர்கள் விடாமல் இரண்டு சக்கர வாகனத்தில் இருவரையும் அழைத்து வந்த வாகனத்தை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். இதற்கு மேல் நம்மால் சுற்ற முடியாது பத்திரிக்கையாளர்களும் நம்மை விடுவதாக தெரியவில்லை என எண்ணிய காவல்துறையினர் ஒரு வழியாக காந்தி சந்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இருவரையும் வைத்துள்ளனர்.

திருச்சி நீதிமன்றத்தில் இருந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையம் மூன்று கிலோமீட்டர் தூரம். அதற்கு 20 கிலோமீட்டர் தூரம் போலீஸ் வாகனத்தில் இருவரையும் வைத்து ஊரையே சுற்றி இரண்டு காந்தி சந்தை காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்தார்கள்.

தாய், மகன் இருவரையும் கைது செய்து காந்தி சந்தை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். காலை நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்தப்படலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

What do you think?

திருச்சுழி அருகே மினி வேன் டிரைவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காளீஸ்வரன் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தவறி கீழே விழுந்து கை முறிந்தது;

திருவாரூரில் ஸ்ரீ குரு தட்சணாமூர்த்தி சுவாமிகள் மடத்தில் 189 ஆவது ஆண்டு குருபூஜை விழா