in

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் திறந்து வைத்தார்

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் திறந்து வைத்தார்

 

மதுரைசோழவந்தான் அருகே சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி முன்னாள் இந்தியகிரிக்கெட் வீரர் பத்ரிநாத் திறந்து வைத்தார்

மதுரையில் முதல் முறை சிறந்த சதுக்கம் ஆஸ்ட்ரோ மேட்டிங் பீச்சுகளுடன் ஃப்ளட்லைட்கள் அமைக்கப்பட்டு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கிரிக்கெட் பயிற்சி அளிக்கக்கூடிய சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது.

சோழவந்தான் அருகே நகரிகல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் கிரிக்கெட் மைதானத்தில், 6 முதல் 23 வயதுவரை உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்குவதற்கான அகடாமியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் திறந்து வைத்தார்.

இது தமிழகத்தின் 12வது மைய மாகவும் மதுரையில் திறக்கப்படும் முதல் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் இது சரியான தளமாக செயல்படும்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமகிருஷ்ணன் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி கிரிக்கெட் இயக்குநர் லூயிஸ் மரியானோ கல்வி குழுமத்தின் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர்.

மதுரை மக்களுக்கு இதுவே முதல் முறை சிறந்த தரமான சதுக்கம் ஆஸ்ட்ரோமேட்டிங் பீச்சுகளுடன் மற்றும் ஃப்ளட்லைட்கள் கொண்ட கண்கவர் கிரிக்கெட் மைதானம் ஆகும். இங்கு உள்ள உலகத்தரமான வசதிகள் மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்தி கிரிக்கெட் ஆர்வலர்கள் தங்களது திறமையை உருவாக்க முடியும்.கிரிக்கெட் பயிற்சியில் சிறந்தவர்களாக வளர்வதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக இந்த அகாடமி அமையவுள்ளது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான பத்ரிநாத் கூறுகையில்.

மதுரையில் சிஎஸ்கே அகாடமி தொடங்கி வைப்பதில் எனக்கு மிக்க சந்தோசம் மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும் மதுரையின் சூழல் நன்றாக உள்ளது தமிழ்நாட்டில் பன்னிரண்டாவது சிஎஸ்கே அகடாமியும் மதுரையில் முதல் முறையாகவும் இந்த அகடாமி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுல ஒவ்வொரு ஊர்ல ஒளிஞ்சிருக்கிற எல்லா திறமையும் உள்ளவர்களை அடுத்த லெவலுக்கு எடுத்து போறதுல நல்ல கோச்சர்ஸ் உள்ளார்கள்.

மதுரையிலிருந்து நல்ல கிரிக்கெட் வளர்ந்து வரக்கூடிய சூழல் இதன் மூலம் ஏற்படும்.

மேலும் இங்கு உருவாகக்கூடிய கிரிக்கெட்டர்ஸ் சிஎஸ்கேக்கு வரக்கூடிய வாய்ப்பு ஐபிஎல் க்கு வரக்கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.

மாணவர்கள் இன்றைய சூழலில் செல்போனில் மூழ்கி இருப்பது குறித்து கேள்விக்கு

உழைப்பே உயர்வு தரும் நான் வளர்ந்தது உழைப்பினால் தான் சின்ன வயதிலிருந்து நல்லது கெட்டது கற்றுக் கொடுத்தது என அனைத்தும் கிரிக்கெட் தான் பொதுவாக வாழ்க்கையில் வெற்றி தோல்வியை சமமா பார்க்க வேண்டும் பேட் நியூஸ் வரும் ஆனால் செட் பேக் கிடையாது ஃபீட்பேக் எடுத்து முன்னேறனும் ஒரு கோச்சா நான் சொல்வது இதுதான்.

உழைப்பே உயர்வு தரும் உழைப்பை முதலில் நம்ப வேண்டும்

இன்றைய காலகட்டத்தில் T 20 கிரிக்கெட் மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து கிரிக்கெட் பார்க்கக் கூடிய அளவில் மக்கள் இல்லை இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு முடியக்கூடிய T 20 மேட்ச் பிரபலமாக உள்ளது

இந்தியாவுக்கு T 20 ரொம்ப புடிச்சிருக்கு இந்தியாவும் T 20 நோக்கி போய்கிட்டு இருக்கு கிரிக்கெட் ஒரு இன்டஸ்ட்ரி காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பார்க்க யாருக்கும் நேரமில்லை

இன்றைய கிரிக்கெட்டில் ஸ்பான்சர்கள் நிறைய வர்றாங்க விரும்புறாங்க நிறைய பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புகள் கமர்சியலாக கிடைப்பதால் கிரிக்கெட் கொண்டாடப்படுகிறது

What do you think?

மதுரையில் தாகத்துடன் இருந்த பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்த பாம்பு பிடி வீரர்

ஐஸ்வர்யா மேல் தனுஷ்….க்கு இன்னும் பாசம் இருக்கிறது