in

மானூாில் 8ம் நுற்றாண்டை சோ்ந்த திருக்கோயில் மஹாகும்பாபிஷே விழா

மானூாில் 8ம் நுற்றாண்டை சோ்ந்த திருக்கோயில் மஹாகும்பாபிஷே விழா

 

அருள்மிகு அம்பலவான சுவாமி திருக்கோயில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷே விழா

திருநெல்வேலி மாவட்டம் மானூாில் அமைந்துள்ள 8ம் நுற்றாண்டை சோ்ந்த திருக்கோயிலான அருள்மிகு அம்பலவான சுவாமி திருக்கோயில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷே விழா 112 ஆண்டுகள் கழித்து சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கும்பாபிஷேக நிகழ்வினை தாிசனம் செய்தனா்.

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலோடு இனைந்த மானூா் அருள்மிகு அம்பலவான சுவாமி திருக்கோயில் 8ம் நுற்றாண்டை சோ்ந்தது. இத் திருக்கோயிலில் சுவாமி நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் விநாயகா் என தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன.

1913ல கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 112 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேக விழா சிறப்பாக இன்று நடைபெற்றது. புராண வரலாறானது கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோயில் வாசலில் நின்று நெல்லையப்பா, நெல்லையப்பா என அழைப்பதும் அதற்கு நெல்லையப்பர் செவிசாய்க்காதது போல் இருந்ததும் கோபமடைந்த சித்தர் எருக்கும் குருக்கும் முளைக்க கடக என சாபம் கொடுத்து விட்டு நெல்லையை அடுத்த மானூர் அம்பலவாண சுவாமி கோயிலுக்கு எழுந்தருளினார்.

அவா் பெருமையை உலகுக்கு உணா்த்த ஆவணி மூலத்தில் நெல்லையப்பா் மானூாில் கரூவூர் சித்தருக்கு காட்சிகொடுத்து சாப விமோசனம் பெற அடிக்கு ஆயிரம் பொன் கொடுப்பதாக கூறி சித்தரை திருநெல்வேலிக்கு அழைத்க சித்தரும் நெல்லைக்கு வந்து ஈசன் இங்கு உண்டு அதனால் ஏருக்கு அற்றுப்போக என மொழிந்தாா்.

புராண சிறப்புகள் கொண்ட இத் திருக்கோயிலில் கடந்த வருடம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷே விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த கடந்த 6ம் தேதி காலை ஸ்ரீகணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது.

மாலையில் தாமிரபரணியில் இருந்து ஊா்வலமாக புனித நீா் எடுத்து வரப்பட்டு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம் கும்ப அலங்காரம் நடைபெற்று யாகசாலையில் கடம் பிரவேசம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முதற்காலை யாக சாலை பூஜைகள் நடைபெற்று திரவ்யாகுதி பூர்ணாகுதி நடைபெற்றது.

தொடா்ந்து 2 மற்றும் 3 ம் கால யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு ஸ்ரீ அம்பலவாணா் நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் விநாயகா் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு எந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் போன்றவைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான இன்று அதிகாலை பிம்ப சுத்தி மூர்த்தி ரக்ஷாபந்தனம் நடைபெற்றன.

தொடர்ந்து நாடி சந்தானம் ஸ்பரிசாகுதி 4ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாகுதி நடைபெற்றது. யாத்ராதானம் நடைபெற்று யாகசாலையில் இருந்து புனித கலச நீர் அடங்கிய கலசங்கள் காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் மேளதாளங்களுடன் எடுத்துவரப்பட்டு சுவாமி விமான கோபுரம் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மகா அபிஷேகம் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

நாகை அருகே தேவூர் அருள்மிகு முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

 84 விநாயகர் விக்ரகங்கள் தாமிரபரணி நதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது