in

 84 விநாயகர் விக்ரகங்கள் தாமிரபரணி நதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது

 84 விநாயகர் விக்ரகங்கள் தாமிரபரணி நதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது

 

நெல்லை மாநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட 84 விநாயகர் விக்ரகங்கள் தாமிரபரணி நதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை ஒட்டி நெல்லை மாநகர காவல் துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மாநகர் முழுவதும் போடப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் 84 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது இரண்டு நாட்கள் பூஜைக்கு பின்னர் இன்றைய தினம் விநாயகர் விக்ரக விஜர்சன நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.

நெல்லை டவுன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு ஒருசேர கொண்டுவரப்பட்டு விஜர்சன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தை மதுரை ஆதீன குருமஹா சன்னிதானம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து விநாயகர் விக்ரகங்கள் அனைத்தும் நெல்லை டவுன் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நெல்லை சந்திப்பு வழியாக தாமிரபரணி நதி கரைக்கு எடுத்துவரப்பட்டது.

அதேபோல் பாளையங்கோட்டை பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பாளையங்கோட்டை சிவன் கோவில் முன்பு ஒருசேர எடுத்துவரப்பட்டு பாளையங்கோட்டை நகர் பகுதி முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வண்ணாரப்பேட்டை தாமிரபரணி நதிக்கரைக்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தில் அறிவுறுத்தல் படி வண்ணாரப்பேட்டை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பேராச்சி அம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட செயற்கை குளத்தில் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் நெல்லை மாநகர பகுதிகளில் வைக்கப்பட்ட 84 விநாயகர் சிலைகளும் விஜர்சனம் செய்யப்பட்டது.

இந்த விழாவையொட்டி நெல்லை மாநகர காவல் துறையை ஆணையாளர் ரூபேஷ்குமார் மீனா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

What do you think?

மானூாில் 8ம் நுற்றாண்டை சோ்ந்த திருக்கோயில் மஹாகும்பாபிஷே விழா

உறுமீன்’ படத்தின் தயாரிப்பாளர் மறைந்தார்