in

பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர்

பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர்

 

நாகையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் வருங்கால முதல்வர் வாழ்க என நடிகர் விஜய் ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக நாகை புதிய பேருந்து நிலையம் அருகே கூடிய தமிழக வெற்றிக் கழகத்தினர் ‌நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சியின் மாவட்ட தலைவர் சுகுமாரன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வருங்கால முதல்வர் வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.

What do you think?

32 அடி உயரமுள்ள அத்தி விநாயகர் ஊர்வலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தமன்னா…வுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்