in

வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடற்கரையில் கரைத்து வருகின்றனர்

வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடற்கரையில் கரைத்து வருகின்றனர்

 

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடற்கரையில் கரைத்து வருகின்றனர்.

முதற்முதல் கடவுளான விநாயகருக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் சதுர்த்தி விழா எடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொலகாலமாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி நகரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்ட சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வீடுகளில் கடந்த ஏழாம் தேதி களிமண் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபாடு நடத்தினர். மூன்று நாட்கள் விநாயகரை வைத்து வீட்டில் வழிபாடு நடத்தியதை தொடர்ந்து இன்று விநாயகர் சிலைகளை கடலில் கொண்டு வந்து கரைத்தனர்.

புதுச்சேரியில் நீண்ட கடற்கரை இருப்பதினால் இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் காலை முதல் விநாயகர் சிலைகளை கரைத்து வருகின்றனர்.

சிறியோர் முதல் பெரியோர்கள் வரை வீட்டில் வைத்து வழிபாடு செய்த சிலைகளை கடற்கரைக்கு கொண்டு வந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு கடலில் கரைத்தனர்.

அவர்களுக்கு அப்பகுதி உள்ள மீனவர்களும் சிறுவர்களும் சிலைகளை கொண்டு சென்று கடலில் கரைப்பதற்கு உதவி செய்தனர்.

What do you think?

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில்  பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது

33 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடத்த அனுமதி