பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (09.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் மொயீன் அலி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் மொயீன் அலி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் களத்தில் இறங்கினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மொயீன் அலி, அரை சதம் அடித்து சாதனை படைத்தார். வருகின்ற 11ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 20 ஓவர் மற்றும் ஐந்து நாள் போட்டியில் விளையாட இவருக்கு அழைப்பு விடுக்கபடவில்லை, அதனால் மொயின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் .அடுத்த தலைமுறைக்கு நான் இடம் விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதுவரை 298 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர், உள்ளூர் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகும் அறிவித்தர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு குளிர்கால எரிபொருள்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு குளிர்கால எரிபொருள் கொடுப்பனவுகளை குறைக்கும் திட்டத்தில் அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது . பிசிஎஸ் யூனியனின் தலைவர் ஃபிரான் ஹீத்கோட் இது முற்றிலும் “தவறு”, என்று கூறினார். தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் தொழிற்சங்க காங்கிரஸின் தலைவரான பால் நோவாக், இந்த விஷயத்தில் அரசாங்கம் ” மறுபரிசீலனை செய்ய வேண்டும்” மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான பிற ஆதரவைப் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
போர்ச்சுகலில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து தப்பிய ஐந்து கைதிகளில்
போர்ச்சுகலில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையிலிருந்து தப்பிய ஐந்து கைதிகளில் ஒரு “மிகவும் ஆபத்தான” பிரிட்டிஷ் கைதி.
39 வயதான மார்க் கேமரூன் ரோஸ்கேலர், லிஸ்பனுக்கு வடக்கே சுமார் 43 மைல் (70 கிமீ) தொலைவில் உள்ள வேல் டி ஜூடியஸ் சிறையில் கடத்தல் மற்றும் கொள்ளையடித்ததற்காக ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். 33 மற்றும் 61 வயதிற்குட்பட்ட ஐந்து ஆண்கள், சனிக்கிழமை காலை சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். வழங்கிய “வெளிப்புற கூட்டாளிகளிடமிருந்து ஏணியை பெற்று சுவர் ஏறி குதித்து தப்பியதாக போர்த்துகீசிய சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்
ஆப்கானிஸ்தானில் சிக்கிய குடும்பத்தின் விசா விண்ணப்பத்தை உள்துறை அலுவலகம் நிராகரித்துள்ளது
ஆப்கானிஸ்தானில் சிக்கிய குடும்பத்தின் விசா விண்ணப்பத்தை உள்துறை அலுவலகம் நிராகரித்துள்ளது, காபூல் வீழ்ச்சியின் போது அவரது மகன் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். தலிபான் தாக்குதலின் போது சுமார் 15,000 பிரிட்டிஷ் பிரஜைகள் மற்றும் ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு பிட்டிங் நடவடிக்கையின் போது அவரது மாமா மற்றும் அத்தையுடன் 10 வயதில் UK க்கு கொண்டு வரப்பட்டார், ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் அகமதுவின் குடும்பம், பிப்ரவரி 2023 இல் தங்கள் மகனுடன் ஐக்கிய இராச்சியத்தில் மீண்டும் இணைவதற்காக குடும்ப மறு இணைப்பு விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தது. ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மீள்குடியேற்றத் திட்டத்தின் (ACRS) மூலம் UK வந்துள்ளதால், அவர் களை ஏற்க முடியாது என்று உள்துறை அலுவலகம் விண்ணப்பத்தை நிராகரித்தது.