in

மயிலாடுதுறையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ கோப்பைகளை வழங்கினார்

மயிலாடுதுறையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி; 500க்கு மேற்பட்ட சிலம்பக்கலை வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ கோப்பைகளை வழங்கினார்

மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் மகாகவி சிலம்பம் அகாடமி சார்பில் 2-வது ஆண்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வீரர்- வீராங்கனைகள் 512 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

வயதுவாரியாக 10, 14 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியை அகாடமி தலைவர் சர்வோதயன், செயலாளர் சுந்தரராமன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

What do you think?

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி முன்னிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்கம் அளவீடு செய்யும் பணி துவங்கியது

தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா