in ,

செஞ்சி சந்தை மேடு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா

செஞ்சி சந்தை மேடு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர் சந்தைமேடு பகுதி ஆணைகுட்டை தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ முத்துமாரி அம்மன், ஸ்ரீஅம்மச்சார் அம்மன் ஆகிய ஆலயங்களின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கடந்த ஆறாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை திருவிளக்கு வழிபாடு கணபதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

ஏழாம் தேதி சனிக்கிழமை மங்கல இசை,திருவிளக்கு வழிபாடு, கணபதி வழிபாடு, புனித நீர் வழிபாடு,கலச பூஜை உடன்,வேள்வி சாலைகளுக்கு கலசங்கள் எழுந்திருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால வேள்வி பூஜையும் ஆரம்பித்து, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன், 8.30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு தொடர்ந்து சிவாச்சாரகள் மந்திரங்கள் முழங்க விநாயகர் கோபுரம் திருக்குட நன்னீராட்டு விழாவு நடைபெற்று பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது,

அதனைத் தொடர்ந்து மூலவர்ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீமுத்துமாரி அம்மன், ஸ்ரீஅம்மச்சார் அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழாவும் நடைபெற்றது.

தொடர்ந்து கோயில் நிர்வாகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இந்த திருக்குட நன்னீராட்டு விழாவில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் வார்டு கவுன்சிலர் அஞ்சலை நெடுஞ்செழியன், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் தலைவர் ரமேஷ்,துணைத் தலைவர் துரை, தர்மகத்தா செல்வம்,பொருளாளர் சுந்தர், பழனி, கார்த்திகேயன்,தினேஷ், மற்றும் செஞ்சி சந்தைமேடு ஆனைக்குட்டைக்காரர் தெரு சிறுகடம்பூர் கிராம பொதுமக்கள்,இளைஞர்கள் கோவில் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

What do you think?

தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா

செஞ்சிக் கோட்டை புதிய தார்சாலை அமைக்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் பணியை தொடங்கி வைத்தார்.