மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி ஊராட்சியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா – ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி ஊராட்சியில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலையில் நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பிரவேசபலி, யாகசாலை பிரவேசம், அங்குரார்ப்பணம்,முதல் கால யாக பூஜைகள், இரவு 9.00 மணிக்கு மஹாபூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
நேற்று காலை 5.50 மணிக்கு மங்கள இசையுடன் கோ பூஜை, வேதபாராயணம்,இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் , நாடி சந்தானம், மாக பூர்ணஹூதி,மகாதீபாரதனையும் காலை 10.00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து தண்டு மாரியம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்,அதிமுக ஒன்றிய செயலாளர் பட்டி பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண் தத்தன்,ஒன்றிய கவுன்சிலர் சியாமளா ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார்,உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்து உபயதாரர்கள், விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.