in ,

மீனாட்சியம்மன் கோவில் ஆவணி முலத்திருவிழாவில் 4 ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமானின் திருவிளையாடலான தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடைபெற்றது

மீனாட்சியம்மன் கோவில் ஆவணி முலத்திருவிழாவில் 4ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமானின் திருவிளையாடலான தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடைபெற்றது – ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்

உலகப்பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவின் 4 ஆம் நாள் நிகழ்வான சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடைபெற்றது.

செண்பக பாண்டிய மன்னன் அறிவித்த பொற்கிழியை தருமி பெறுவதற்காக பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு என்பதை கூறும் ஓலையை கொடுத்து அதனை வாசித்து தருமி பொற்கிழியை பெறவைத்து தருமியின் கூற்றை மறுத்த நக்கீரரின் ஆணவத்தை சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணால் சுட்டு பொற்றாமரை குளத்தில் விழசெய்து ஆணவ குணத்தை அழித்த திருவிளையாடலை எடுத்துரைக்கும் வகையில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலையானது நடைபெற்றது.

அப்போது திருவிளையாடலை எடுத்துரைக்கும் வகையிலான அலங்காரத்தில் கையில் ஓலையுடன் பிரியாவிடையுடன் கையில் ஓலையை வைத்தபடி சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

முன்னதாக சுவாமிக்கும் அம்மனுக்கும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

ஆவணி திருவிழாவில் நான்காம் நாள் நிகழ்வை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்

What do you think?

மதுரை வில்லாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்திய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மகாவிஷ்ணு ஆற்றியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல அது சனாதன சொற்பொழிவு