in

கும்பகோணம் அருகே இரண்டாம்கட்டளையில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் அருகே இரண்டாம்கட்டளையில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்..

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இரண்டாம்கட்டளையில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத அருள்மிகு கைலாசநாத சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாத சுவாமி ஆலயத்தின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்ட 150 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்

நவகிரக கோயில்களில் பிரதானமாக விளங்கும் சூரியனார்கோயில் சிவசூரியப்பெருமான் திருக்கோயில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம்