in

புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை

புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை

 

புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று பேராசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி தமிழ் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரி கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ராம்குமார்…

புதுச்சேரியில் கடந்த 40 வருடங்களாக 6 சொசைட்டி கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 20,000 மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

2004 -ம் ஆண்டிற்கு முன்பு பணிக்கு அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள்பழைய பென்ஷன் திட்டத்தில் பயன் அடைந்து வருகின்றனர்.

அதேபோல் 2004 -ம் ஆண்டுக்கு பிறகு பணிக்கு அமர்த்தப்பட்ட மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முனிசிபாலிட்டி ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சொசைட்டி கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாமல் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

இதனால் ஊழியர்கள் பணி ஓய்வு பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கப்படாத சூழலை உருவாக்கி உள்ளதுடன், ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகு போதுமான ஓய்வூதியம் கிடைக்க பெறாத நிலை உருவாகி உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

எனவே மத்திய அரசு அறிவிப்பின்படி அரசு ஊழியர்கள் மற்றும் முனிசிபாலிட்டி ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது போல், சொசைட்டி கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனை வலியுறுத்தி முதலமைச்சர் தலைமை செயலர் மற்றும் துறை இயக்குனர்களை சந்தித்து மனு அளிப்பது, வருகின்ற 18 -ம் தேதி முதல் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என்றும் அவர் தெரிவித்தார்.

What do you think?

தற்கொலையில் தேசிய அளவில் புதுச்சேரிக்கு 3 வது இடம்.. விழிப்புணர்வு ஊர்வலத்தில் மருத்துவர்கள் தகவல்…

தண்ணீர் இல்லாமல் கருகும் சம்பா சாகுபடி விவசாயிகள் போராட்டம்