in

தற்கொலையில் தேசிய அளவில் புதுச்சேரிக்கு 3 வது இடம்.. விழிப்புணர்வு ஊர்வலத்தில் மருத்துவர்கள் தகவல்…

தற்கொலையில் தேசிய அளவில் புதுச்சேரிக்கு 3 வது இடம்.. விழிப்புணர்வு ஊர்வலத்தில் மருத்துவர்கள் தகவல்…

தேசிய மனநல திட்டம் சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு மாதத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை வளாகத்திலிருந்து தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி மருத்துவ கண்காணிப்பு அதிகாரி மருத்துவர்.செவ்வேல்,துணை இயக்குனர் ரகுநாத் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர் .
தற்கொலைத் தடுப்பு விதமான முழக்கங்களோடு பதாகைகளை ஏந்தி செவிலிய மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதில் சபரி செவிலியர் கல்லூரி, இந்திராணி செவிலியர் கல்லூரி, மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி, ராக் செவிலியர் கல்லூரி, ஏஜி பத்மாவதி செவிலியர் கல்லூரி, இந்திராணி செவிலியர் கல்லூரி மற்றும் ஷென் செவிலியர் கல்லூரி மாணவிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் கஜலட்சுமி கூறுகையில், புதுச்சேரியில் நான்கு மடங்கு தற்கொலைகள் பதிவாகின அதாவது 48% பேர் தற்கொலையால் இறக்கும் சூழ்நிலை இருந்தது. தற்பொழுது இந்த ஆண்டு அது 29 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் தேசிய அளவில் பார்க்கும்போது புதுச்சேரி மூன்றாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

தற்கொலை தடுப்பிற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை அரசு நடத்தி வருகிறது அவர்களுக்கு உதவிட 14416 என்கிற இலவச தொலைபேசி ஆலோசனையும் வழங்கப்படும் இதனை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதாக புதுச்சேரி அரசு மருத்துவ கண்காணிப்பு அதிகாரி செவ்வேல் தெரிவித்தார்.

What do you think?

4 கோடி ரூபாய் செலவில் கட்டி 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத சமுதாய நலக்கூடம்

புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை