in

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்

 

திருச்சியில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஒரு நாள் அடையாள போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் 1640 தொடக்கப் பள்ளிகளில், சுமார் 5000 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டு, வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

31 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும், தமிழக தொடக்ககல்வி ஆசிரியர்களை வஞ்சிக்கும் தமிழக அரசையும், பள்ளிக்கல்வித் துறையையும் கண்டித்து டிட்டோஜாக் சார்பாக இன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட தலைநகரங்களில் இன்றைய தினம் ஆர்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 31 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆகையால் இந்த திமுக ஆட்சி அமைவதற்காக அரும்பாடுபட்ட ஆசிரியர்களை தெருவில் நிற்கவைத்த விளம்பரம் திமுக அரசை கண்டித்து டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டிட்டோஜாக் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்க செயலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கஉரையாற்றி, கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால் காலாண்டு விடுமுறை தினத்தில் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவோம் எனவும் அரசுக்கு இந்நேரத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.

What do you think?

நடிகை ராஷ்மிகா மந்தனா விபத்து

GOAT குட்டி ஜீவன் யார் தெரியுமா?