in

குத்தாலத்தில் திமுக பேரூராட்சியை கண்டித்து போராட்டம்

குத்தாலத்தில் திமுக பேரூராட்சியை கண்டித்து போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் திமுகவினர் ஒருவருக்கொருவர் தள்ளு முள்ளு, ஏற்பட்டதால் பரபரப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில், தாட்கோ நிதியில் கட்டப்பட்டு, 10 கடைகள் செயல்பட்டு வந்த பேரூராட்சிக்கு சொந்தமான 25 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட பேரூராட்சி முடிவு செய்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தி வந்த இந்த கடையை பழுது நீக்குவதாக கூறி அவர்களை வெளியேற்றிவிட்டு நிரந்தரமாக கட்டிடத்தை இடித்து . தாழ்த்தப்பட்ட மக்களை திமுக பேரூராட்சி நிர்வாகம் ஏமாற்றி விட்டதாக தெரிவித்து பேரூராட்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசு மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உரையாற்றிக் கொண்டிருந்தனர் அப்போது அங்கு வந்த குத்தாலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வைத்தியனாதன், பேரூராட்சி செயலாளர் சம்சுதீன் மற்றும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தனிநபரை தாக்கி பேசுவது குறித்து முறையிட்டனர் இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனை அடுத்து பேரூராட்சி எதிரே விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதற்கு எதிரே சாலையில் அமர்ந்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் தொடர்ந்து சமாதானம் செய்து திமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமகுரு என்பவர் தகாத வார்த்தைகளால் மேடையில் பேசியதாக குத்தாலம் பேரூராட்சி திமுக செயலாளர் சம்சுதீன் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

What do you think?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா

ஜெயின் சமூகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை உண்ணா நோன்பு