in

திருவாரூரில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1000 கணக்கான ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூரில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 1000 கணக்கான ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக திரண்ட 1,000 – க்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். உடனடியாக தமிழக அரசு செவி சாய்த்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

What do you think?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பேட்டி..

திருச்சி இருங்களூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் தற்கொலை