in

திருத்துறைப்பூண்டி அருகே லாரி இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவர் பலி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

திருத்துறைப்பூண்டி அருகே லாரி இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர்கள் இருவர் பலி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி ராஜ கொத்தமங்கலத்தைச் சார்ந்தவர் அறிவழகன் இவருடைய மகன் குறளரசன்( வயது33) இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் கடியாச்சேரியைச் சார்ந்த அச்சுமணி இவருடைய மகன் மணிகண்டன்( வயது 28) இவரும் இருசக்கர வாகனம் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கு சத்தியா என்ற மனைவியும் யஷ்வந்த் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் குறளரசன் மற்றும் மணிகண்டன் இருவரும் நண்பர்கள் இன்று மாலை குறளரசன் மற்றும் மணிகண்டன் இருவரும் இருசக்கர வாகனத்தில் மணிகண்டனின் மகனின் பிறந்தநாளுக்காக கேக் மற்றும் பொருள்கள் வாங்க கடியாச்சேரி கடை தெருவுக்கு வந்தனர்.

அப்போது காய்கறி ஏற்றுவதற்காக ஒட்டன்சத்திரம் சென்ற லாரி கடியாச்சேரி கடை தெருவில் வந்த போது லாரியும் மணிகண்டன் மற்றும் குறளரசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் குறளரசனை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் குரலரசனும் உயிர் இழந்தார்.

இது சம்பந்தமாக திருத்துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ,காவல் ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து லாரி டிரைவர் ஒட்டன்சத்திரம் தெத்துப்பட்டி பகுதியை சார்ந்த மனோகரன் (வயது 50) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தது திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

காரட்டை கிராமம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

நடிகர் நிவின் பாலி… போலீஸ்…இல் பிடிபட்டார்