in

தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம்

தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம்

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம்., யானையை விரட்ட சென்ற வனத்துறையினர் வாகனத்தை மறித்து நிறுத்திய காட்டெருமை…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் இயங்கி வருகிறது. இந்த சரணாலயம் அமைந்துள்ள பகுதிகளில் புலி, யானை, காட்டெருமை, மிளா, மான், கரடி சிறுத்தை, அரிய வகை அணில்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு, மம்சாபுரம்,அத்திதுண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரகணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களும் உள்ளன.

மலை உச்சியில் வசித்து வந்த யானைகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அடிவாரப் பகுதிகளில் முகாமிட்டுசுற்றித் திரிகின்றன.காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மாமரம், பலா, வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளும் கவலை அடைந்து விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக யானைகளை வனப் பகுதிகளுக்குள் விரட்ட மேளதாளங்கள் அடித்தும் தீ மூட்டம் மூட்டியும் வனத்துறையினர் தினந்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் செண்பகத்தோப்பு – அத்திதுண்டு சாலையில் யானைகள் சுற்றி வந்துள்ளது இதனைக் கண்ட விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து யானையை விரட்டும் செயலில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் யானையை வனபகுதிக்குள் விரட்டுவதற்காக வந்த போது திடீரென காட்டெருமை ஒன்று வனத்துறையினர் சென்ற வாகனத்தை மறித்து சாலையில் குறுக்கே அங்கும் இங்குமாக நடந்து சென்று வாகனத்தை தாக்க முயன்றது. வனத்துறையினர் காட்டெருமையை வனபகுதிக்குள் விரட்டியபின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் சுற்றி வலம் வரும் காட்டு யானைகளை நோட்டமிட்டு வனப்பகுதிகள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் வாகனங்களில் செல்லும்போது கவனமுடன் செல்ல வேண்டும் அல்லது சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும், யானை மற்றும் மன விலங்குகளை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் விவசாயிகள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

What do you think?

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த கும்பல் கைது