in

தொட்டியத்தில் போலீஸ் சீருடையில் வந்து பெட்ரோல் பங்கில் தகராறு

தொட்டியத்தில் போலீஸ் சீருடையில் வந்து பெட்ரோல் பங்கில் தகராறு

 

பணிநீக்கம் செய்யப்பட்டவர் சீருடையில் வந்து நிஜ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்யம்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள பெட்ரோல் பங்கில் கேசியராக பணிபுரிபவர் தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் சரவணன் (35) இவருடன் பம்பு ஆபரேட்டராக பணிபுரியவர் கனகநாதன் ஆகிய இருவரும் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்தனர்.

அப்பொழுது போலீஸ் சீருடையில் வந்த டிப்டாப் ஆசாமி தனது இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 200-க்கு பெட்ரோல் போட்டுள்ளார்.
கனகநாதன் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கேட்டதற்கு பணம் தர முடியாது.

போலீசிடமே பணம் கேட்கிறாயா? எனக்கூறி அருகில் இருந்த கம்பியை எடுத்துக்கொண்டு கனகநாதன் மற்றும் சரவணன் ஆகியோரை தாக்க முயன்றுள்ளார்.

மேலும் அந்த போலீஸ் உடைய அணிந்த ஆசாமியின் உடைகள் அழுக்காகவும் அவரது இடது பக்க கண்ணுக்கு கீழே அடிபட்டு கண்ணிய காயம் இருந்ததால் சந்தேகமடைந்த சரவணன் மற்றும் கனகநாதன் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்துள்ளனர்.

தொட்டியம் காவல் நிலையத்தில் சரவணன் சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் பெட்ரோல் பங்கில் போலீஸ் சீருடை இருந்த நபர் சேலம் சங்கர் நகரைச் சேர்ந்த மாதவன் மகன் மணிகண்டன் (45) எனவும் இவர் போலீஸ் வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். போலீஸ் வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் போலீஸ் சீருடைகள் வந்து பெட்ரோல் பங்கில் தகராறு செய்து நிஜ போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

திருச்சியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த கும்பல் கைது

மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா தங்க குதிரை வாகனத்தில் அருள்பாலித்தனர்