in ,

பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் திருப்பவித்ரோஸ்தவம்

பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் திருப்பவித்ரோஸ்தவம்

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் திருப்பவித்ரோஸ்தவம். ஏராளமானோா் சுவாமி தாிசனம்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பழமையான இத் திருக்கோவிலில் அஷ்டாங்க விமானத்தின் கீழ் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மன்னாரும், மூலவா் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணரும், உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத இராஜகோபாலா் ஆகிய மூன்று மூா்த்திகள் அருள்பாலிக்கின்றனா்.

உலக மக்கள் இகபர சௌபாக்கியங்கள் பெற்று நலமோடு வாழ ஆலயங்களில் திருவிழாக்கள், பூஜைகள் நடைபெறுகின்றன. இவ்வாறு நடைபெறும் பூஜைகளில் அறிந்தோ அறியாமலோ சிறு சிறு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதை நிவா்த்தி செய்யும் பொருட்டு கோவில்களில் திருப்பவித்திர உற்ச்சவம் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

இத்திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான திருப்பவித்ரோஸ்தவம் நேற்று ஆரம்பமாயிற்று. காலை புண்யாகவாசனம் பகவத் ப்ராத்தனை ம்ருத்சங்கீரணம் அங்குராா்பணம் நடைபெற்று பவித்ரமாலைகள் வைக்கப்பட்டு முதல்கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமாயிற்று. மாலையில் 2ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பவித்ர உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை விஸ்வரூபம் காலை சந்திகள் நடைபெற்றதும் யாகசாலையில் உற்சவா் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத இராஜகோபாலர் ஏழுந்தருளினாா்.

தொடா்ந்து மூன்றாம் கால யாசாலை பூஜைகள் ஆரம்பமாயிற்று. பிரபந்தகோஷ்டியினா் வேதத்தின் சாரமான திருவாய்மொழி பாசுரங்களை சேவித்தனா்.

பின்னா் பவித்ரமாலைகள் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு மூலவா் உற்சவா் மற்றும் அனைத்து சன்னதியிலும் பவித்திர மாலை அணிவிக்கப்பட்டடு காப்பு கட்டப்பட்து.

தொடா்ந்து யாகசாலையில் கும்பத்திற்கு பவித்ர மாலை அணிவிக்கப்பட்டு பூா்ணாகுதி நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமிக்கும் கும்பத்திற்கும் அா்ச்சனை ஆராதனைகள் நடைபெற்றது நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பின்னா் சாற்றுமுறை, தீா்த்தம் பிரசாதம் விநியோகம் நடைபெற்றது. ஏராளமான பக்த பெருமக்கள் இதில் கலந்துகொண்டனா்.

What do you think?

வீட்டை விற்ற நடிகை த்ரிஷா

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 11 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று விடுமுறை