100 நாள் வேலை திட்ட பணியை வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்
புதுச்சேரி மங்களம் தொகுதியில் 2 கோடியே 30 ஆயிரம் ரூபாய் செலவில் 100 நாள் வேலை திட்ட பணியை வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் அரசின் மூலம் கிராமப்புற மக்களின் நலன் கருதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை திட்ட பணி வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மங்களம் தொகுதிக்குட்பட்ட மணக்குப்பம் கிராமத்தில் உள்ள மலட்டாற்றின் மேற்குப் பகுதியில் கரையை பலப்படுத்துதல் பணிக்காக 33 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும் சிவரந்தகம் கிராமத்தில் ஏரியை ஆழப்படுத்துதல் பணிக்காக 39 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவிடும் தனத்துமேடு ஏரியின் தெற்கு தொகுதியை ஆழப்படுத்துதல் பணிக்காக 19 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவிலும்
உறுவையாறு ஏரியின் மத்திய பகுதியை ஆளப்படுத்துதல் பணிக்காக 28 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவிலும் அரியூர் ஏரியின் தெற்கு பகுதியை ஆழப்படுத்துதல் பணிக்காக 19 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் MN குப்பம் வாய்க்காலை தூர்வாரும் பணிக்காக ஒன்பது லட்சத்து 82,000 ஆயிரம் ரூபாய் செலவிலும் கோட்டைமேடு சங்கராபரணி ஆற்றின் கரையை பலப்படுத்துதல் பணிக்காக 39 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் மங்களம் தொகுதியில் உள்ள கிராமங்களில் தன் 2 கோடியே 9000 ரூபாய் செலவில் 100 நாள் வேலை திட்ட பணியை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வேளாண் துறை அமைச்சருமான தேனீ ஜெயக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன் செயற்குறியாளர் சீனிவாசன் உதவி பொறியாளர் ராமன் இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் பணி ஆய்வாளர் மாறன் கிராமத்திட்ட ஊழியர்கள் மற்றும் என் ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.