அச்சிறுபாக்கம் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி சதுர்த்தசியையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் சிவாலயங்களில் நடராஜபெருமானுக்கு ஆறு முறை அபிஷேகங்கள் நடைபெறுவது ஐதீகம்.
அதன்படி, குரோதி வருடத்தின் ஆவணி சதுர்த்தியையொட்டி நடராஜ பெருமானுக்கும், சிவகாமசுந்தரிக்கும் பால், தயிர், தேன் சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், சுவர்ண அபிஷேகம் உள்ளிட்ட 15 வகையான சிறப்புப் பொருட்களால் அபிஷேகமும் மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் ஒலிக்க மகா தீபாரணையும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வழிபட்டுச் சென்றனர்.