in

கனகசபா நாட்டியாலயா பரதநாட்டிய சலங்கை பூஜை விழா

கனகசபா நாட்டியாலயா பரதநாட்டிய சலங்கை பூஜை விழா

 

நடனமாடி அசத்திய மாணவர்கள் மெய்சிலிர்த்துப் போன பார்வையாளர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் திருமண மண்டபத்தில் கனக சபா நாட்டியாலயா பரதநாட்டிய சலங்கை பூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம் ஆயிரவைசிய சபைத் தலைவர் ராசி என் போஸ் மருத்துவர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கனக சபா நாட்டியாஞ்சலி நிறுவனர் செல்வி சீனிவாசன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

பின்னர் மாணவர்கள் கர்நாடிக் சங்கீதம், தமிழ் பக்தி பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். பின்னர் மாணவர்களுக்கு நினைவு கேடயங்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனகசபா நாட்டியஞ்சலி நிறுவனர் செல்வி சீனிவாசன் தனது மகள் வாசவி ஸ்ரீ பரதத்தில் ஆர்வம் கொண்டதை அறிந்து ஆசிரியர் நியமித்து கற்றுக் கொடுத்து வந்த நான் இந்த சுற்று வட்டாரத்தில் பரதத்தில் ஆர்வம் கொண்டவர்களை கண்டறிந்து அவர்களை வெளி கொண்டு வர வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த கனக சபா நாட்டியஞ்செலியை தொடங்கி அதை ஒரு சேவையாக செய்து வருகிறேன் எனவும் தனது மாணவர்கள் உத்தரகோசமங்கை ஆருத்ரா அன்று நடராஜரின் முன்பு நடனமாடி மகிழ்வார்கள் எனவும் தற்போது தனது நாட்டியாஞ்சலியிள்75 மாணவர்கள் பயின்று வருவதாகவும் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

பின்னர் பேசிய பரத ஆசிரியர்கள் மகேஸ்வரி கண்ணன் பரதம் ஆடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும் உடலில் அனைத்து பாகங்களும் ஆரோக்கியமாக இருக்கும் குறிப்பாக பெண்கள் அரை மண்டி நிலையில் நடனமாடும் போது முதுகுத்தண்டு, இடுப்பு பகுதி பலம் பெறுவதாகவும் தெரிவித்தார்.

What do you think?

கள்ளச் சந்தையில் மது விற்பனைகள் படுஜோர் கண்டுகொள்ளாத மதுவிலக்கு போலீசார்

 சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை