புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி இன்று காலை 11-27 மணி அளவில் தொடங்கிய பௌர்ணமி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள்.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் இன்று காலை11-27 மணிக்கு தொடங்கி நாளை காலை 09-10 மணி வரை உள்ள நிலையில் பௌர்ணமி கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றார்கள்.
அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை 4-30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு சம்பந்தவிநாயகர் முருகர் அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபஆராதனை நடைபெற்று பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக வெயிலின் தாக்கம் குறைய சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீர் மோர் பிஸ்கட் பாக்கெட்
தண்ணீர் கடலை மிட்டாய் உள்ளிட்டவைகள் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக நீண்ட வரிசையில் நின்று வரும் பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.
கொடிமரம் அருகில் கர்ப்பிணிப் பெண்கள் வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன வரிசை திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் அடையார் மாதவரம் கோயம்பேடு பகுதிகளிலிருந்து பேருந்துகளில் பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வரலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தாம்பரம் மற்றும் மாயவரத்தில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு இயக்கப்படுகின்றது.