in

திருத்துறைப்பூண்டியில் உண்ணாவிரதம் பி ஆர் பாண்டியன் அறிவிப்பு

திருத்துறைப்பூண்டியில் உண்ணாவிரதம் பி ஆர் பாண்டியன் அறிவிப்பு

 

கொருக்கை கால்நடை பண்ணையை சிப்காட் ஆக மாற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கண்டித்து அக்டோபர் 8 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் உண்ணாவிரதம் பி ஆர் பாண்டியன் அறிவிப்பு.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை கால்நடை பண்ணையை நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் புகழ்மிக்க உம்பளச்சேரி வகை நாட்டின கால்நடை இனங்கள் வளர்க்கும் கொருக்கை கால்நடை பண்ணை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

1972ல் உருவாக்கப்பட்ட பண்ணை 497 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.

இங்கு உம்பளச்சேரி நாட்டின பசுக்களை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர்.தற்போதைய நிலையில் சுமார் 600க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.ன

திமுக தனது 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொருக்கை கால்நடை பண்ணையை ஆராய்ச்சி மையமாகவும், கால்நடை கல்லூரி ஆகவும் மேம்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தனர்.
தற்போது இப்பண்ணையை சிப்காட் அமைப்பிற்கு மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசுக்கு முன்மொழிந்து உள்ளதாக தெரிய வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உண்மை நிலையை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் சிப்காட் என்கிற பெயரில் பண்ணையை ஒழித்துக் கட்ட நினைப்பது கண்டிக்கத்தக்கது. எனவே சிப்காட் அமைப்பதை கைவிட்டு தமிழக அரசு கால்நடை மருத்துவ கல்லூரியும், ஆராய்ச்சி மையத்தையும் உருவாக்கி உலகளாவிய அளவில் நாட்டின பசுக்கள் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், பசுவளர்பை ஊக்கப்படுத்துவதற்கும் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இதனை வலியுறுத்தி வருகிற அக்டோபர் 8ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில்மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், கொருக்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

What do you think?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் 8-வது உலக திரைப்பட விழா

நாமக்கல் எருனமபட்டி அருகே ஓலைப்பிடாரி அம்மனுக்கு பிஸ்கட் அலங்காரம் பக்தர்கள் தரிசனம்