in

1000 ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி தூர்வாரிய கிராம மக்கள்

1000 ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி தூர்வாரிய கிராம மக்கள் 

 

சிதம்பரம் அருகே 2 கிலோமீட்டர் தூரம் பாசன வாய்க்காலை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி தூர் வாரி இரு கரைகளையும் பலப்படுத்திய நெகழ்ச்சி சம்பவம்.

சிதம்பரம் அருகே ஆதிவரங்கநல்லூர் கிராமம் உள்ளது, இந்த கிராமத்தில் ஆதிவரங்கநல்லூர் பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 1000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும் இரு கரைகளையும் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை தூர்வார மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள் துறையின் கீழ் இந்த பாசன வாய்க்கால் இல்லை என தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் ஊராட்சி நிர்வாகம் தூர் வருவதற்கு நிதி இல்லை என கூறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சுமார் 8 லட்சம் ரூபாய் நிதி வசூல் செய்து ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை அந்த பாசன வாய்க்காலை தூர்வாரி உள்ளனர்.

மேலும் இரு கரைகள் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு தற்போது அகலப்படுத்தப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த பாசன வாய்க்கால் மூலம் சுமார் 1000 ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் பெறும் என்பதால் கிராம மக்கள் தானாக முன்வந்து நிதி திரட்டி தூர்வாரி தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாக்கும் விதமாக முன்னோடி கிராமமாக இந்த பணி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

மானூரில் அருள்மிகு தலைவாசல் கருப்பணசாமி கோயில் உற்சவ திருவிழா

ஆழ்வாா்திருநகாி ஆதிநாதா் திருக்கோயிலில் பவித்ர உற்சவம் தங்க கருட வாகனத்தில் வீதி உலா