காளையார்கோவில் புனித மைக்கேல் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சரஸ்வதி விநாயகர் திருக்கோயில். ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் புனித மைக்கேல் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சரஸ்வதி விநாயகர் திருக்கோயில் நான்காம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 108 ஷங்காபிஷேக வைபவம் நடைபெற்றது முன்னதாக சுவாமி சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் மற்றும் 108 வெண் சங்குகளை பூக்களால் அலங்கரித்து வைத்தனர் தொடர்ந்து கணபதி பூஜை உடன் யாக பூஜைகள் துவங்கியது சங்கல்பம் விக்னேஸ்வர பூஜை விளக்கு பூஜை வழிபாடு நடத்தி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் பூர்ணாகுதி சமர்ப்பித்து வேத மந்திரங்கள் முழங்க பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் சரஸ்வதி விநாயக பெருமானுக்கு என்னை காப்பு சாற்றி திருமஞ்சன பொடி மாவு கரைசல் பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன இதனைத் தொடர்ந்து 108 சங்குகள் மற்றும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன
இதனை அடுத்து சந்தன காப்பு அலங்காரம் சாற்றி உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இவ்விழாவில் கல்லூரி தாளாளர் திரு ஸ்டாலின் ஆரோக்கியராஜ், முதன்மைச் செயலாளர் திருமதி பிரிஜெட் நிர்மலா,முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.