in

புதுச்சேரி மாநில வருவாய் சுற்றுலா பயணிகளால் தான் அதிகரித்து வருகிறது சுற்றுலா பயணிகளை விரட்டுப்பவர்களாக இருக்க கூடாது முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்

புதுச்சேரி மாநில வருவாய் சுற்றுலா பயணிகளால் தான் அதிகரித்து வருகிறது,எனவே போலீசார் சுற்றுலா பயணிகளை வரவேற்கக் கூடியவர்களாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை விரட்டுப்பவர்களாக இருக்க கூடாது முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்

புதுச்சேரி காவல் துறைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 289 காவலர்கள் (26th Batch) மற்றும் 19 ஓட்டுநர்கள் நிலை-3 (2nd Batch) ஆகியோரின் பயிற்சி நிறைவு மற்றும் அணிவகுப்பு விழா கோரிமேடு காவல்துறை மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஆறுமுகம் ,அரசுச்‌ செயலர் பத்மா ஜெய்ஸ்வால்,காவல்துறை தலைமை இயக்குநர்,ஷாலினி சிங், உள்ளிட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி…பயிற்சி முடிந்து இன்று முதல் பணியாற்றப் போகும் அனைத்து காவலர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதற்காக குறிப்பிட்டார். காவல்துறையினர் சுறுசுறுப்பாக பணியாற்றும் போது சட்ட ஒழுங்கையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்ற அவர் இந்திய அளவில் சிறந்த காவலர்களாக நாம் விளங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி அரசு காவல்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி வருவதாக தெரிவித்த ரங்கசாமி,புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம், அழகான மாநிலம், சுற்றுலா தளமாக விளங்குவதுடன் சுற்றுலா பயணிகளை கவர்கின்ற மாநிலமாக இருந்து வருகிறது இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து மாநில வருவாயும் உயர்ந்து வருகிறது எனவே காவல்துறை சார்ந்தவர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்க கூடியவர்களாக இருக்க வேண்டும் அவர்களை விரட்டுபவர்களாக இருக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.உங்களது பணி சிறப்பாக இருக்க வேண்டும் என்பது நமது எண்ணம் காவலர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றும்போது மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றார்.

மேடை பேச்சு…. ரங்கசாமி.. முதலமைச்சர்…

இதனைத்தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார். விழாவின்‌ நிறைவாக புதிய காவலர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள் அவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

புதுச்சேரி…கொரோனா தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து 150 நாடுகளுக்கு கொடுத்தோம் தமிழக ஆளுநர் R.N.ரவி பேச்சு

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. புதுச்சேரி பெருமாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு