in

புரட்டாசி முதல் சனிக்கிழமை தமிழக திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பனகோயில் அருள்மிகு வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு தமிழக திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பனகோயில் அருள்மிகு வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோயிலில் அதிகாலை முதல் அவர்கள் நீண்ட வரிசையில்  சுவாமி தரிசனம்…

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு வைணவ திருத்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது அந்த வகையில் தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுந்தம் என்றெல்லாம் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதி சுவாமிகோயில் உள்ளது.

பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய நால்வரால் பாடல்பெற்ற தலம். பூமிதேவியின் அவதார தலமாக விளங்கும் இ திருக்கோயில் பல்வேறு சிறப்புகளுடன் இருந்து விலங்கி வரும் இக்கோயிலில் புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது குறிப்பாக புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள வெங்கடாசலபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு பணிகளில் திருவிடைமருதூர் சரக காவல்துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் 4 காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செங்கனூர் திருவள்ளியங்குடி நாச்சியார் கோயில் திருநறையூர் உள்ளிட்ட பல்வேறு வைணவ திருத்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

What do you think?

புதுச்சேரி..பாதுகாப்புக்கு செலவிடுவதில் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது நிர்மலா சீத்தாராமன் உறுதி

தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் தீபாராதனை