in

தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் தீபாராதனை

தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில்  புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

தஞ்சாவூர் நாலுகால் மண்டபத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயிலில் ஒன்றாகத் திகழ்கிறது.

ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமை அதிகாலையில் திருமஞ்சனம் அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.

இக்கோவிலை தஞ்சை திருப்பதி என பக்தர்கள் அழைப்பார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு தங்க கவசங்கள் பூமாலைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.இன்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகமும் நடைபெற்றது.இந்த வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் செய்து வருகின்றனர்.

What do you think?

புரட்டாசி முதல் சனிக்கிழமை தமிழக திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பனகோயில் அருள்மிகு வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜக யுவமோச்சா பலர் கைது