in

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தம்

நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தம்

 

சுருக்கு மடி வலையை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தம் : 700 விசைப்படகு 4000 பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் நாகப்பட்டினம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம், காரைக்கால் கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுருக்குமடி வலையை தமிழக அரசு முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தி நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், வரும் 24ஆம் தேதி நாகப்பட்டினம் காரைக்கால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கூட்டம் நடத்தி போராட்டத்தை தீவிரப் படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமத்தை சேர்ந்த 700 விசைப்படகு மீனவர்களும் 4000 பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் கடற்கரை ஓரங்களில் துறைமுகங்களிலும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் சுமார் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள நேர்முகமாகும் மறைமுகமாகும் ஒரு லட்சம் நபர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்த கலவரற்ற வேலை நிறுத்தம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் மூன்று மாவட்ட மீனவர்கள் தலைமை கூட்டத்தில் தீவிர படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரைக்கும் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

ஏழுமலையான் கோவிலில் துவக்கிய சாந்தி யாகம்

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை