in

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் குழந்தைப் பருவ புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் குழந்தைப் பருவ புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு

 

குழந்தைப் பருவ புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாரத்தான் நிகழ்வு.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் குழந்தைப் பருவ புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும் விதமாக புற்றுநோயிலிருந்து முற்றிலும் மீண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சாம்பியன்ஸ் மாரத்தான் நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மருத்துவமனை நிர்வாகி காமினி குரு சங்கர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மதுரை இலாந்தை குளம் பகுதியில் உள்ள எல்காட் ஐடி பூங்காவில் தொடங்கி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை வரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குழந்தை பருவ புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு 300 க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குழந்தைப் பருவ புற்றுநோய் என்பது முழுமையாக குணப்படுத்த கூடியவை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாகவும், இதன் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கில் மாரத்தான் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

What do you think?

மண்டல அளவிலான அபாகஸ் போட்டியில் 3500 பேர் பங்கேற்பு

புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்