in

மதுவிலக்கு அமல் படுத்த கூட்டணியில் உள்ள திருமாவளவன் அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எல் முருகன்

மதுவிலக்கு அமல் படுத்த கூட்டணியில் உள்ள திருமாவளவன் அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எல் முருகன்

சங்கரன்கோவிலில் மத்திய இணை அமைச்சரும் முன்னாள் மாநில தலைவருமான எல் முருகன் தென்காசி மாவட்டத்தில் மிஸ்டு கால் மூலம் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை துவக்கி வைத்தார்

நகரின் முக்கிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையை துவங்கிய அவர் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து செல்போன் கொண்டு மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக சேர்வது குறித்து எடுத்துரைத்தார் தொடர்ந்து

செய்தியாளர்களை சந்தித்த அவர்

தேசிய மது ஒழிப்பு கொள்கையை மத்திய அரசு நிறைவேற்றும் வரை போராட போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு

மதுவிலக்கை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் அரசியலுக்காக வெட்டிப் பேச்சு பேசுவதை விட்டுவிட்டு மதுவிலக்கு அமல் படுத்த கூட்டணியில் உள்ள திருமாவளவன் அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் மதுவிலக்கு கோரிக்கை மாநாடு என்பது ஒரு மிகப்பெரிய ட்ராமா எனச் சாடிய அவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார் திமுக கூட்டணி ஆட்சியில் உள்ளது திருமாவளவன் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறார் அதன் மூலம் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறார் முதல்வரிடம் மதுவிலக்கு கொடுங்கள் என திருமாவளவன்தான் கேட்க வேண்டும்

மதுவிலக்கு கொண்டு வர வேண்டியது ஸ்டாலின் தான் அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது கூட்டணி கட்சியான திருமாவளவன் தான் சும்மா அரசியலுக்காக வெட்டிப் பேச்சு பேசுவதை விட்டுவிட்டு மதுவிலக்கு அமல் படுத்த கூட்டணியில் உள்ள திருமாவளவன் அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் மதுவிலக்கு வேண்டும் என்பது எல்லா தாய்மார்களின் கோரிக்கை தான் என அவர் தெரிவித்தார் தொடர்ந்து நிதீஷ் குமார் சந்திரபாபு நாயுடு காலில் விழுந்து பாஜக ஆட்சி நடத்துவதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு

வாஜ்பாய் ஆரம்பித்த தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் பலமான கூட்டணியாக இந்த கூட்டணி இருந்து வருகிறது இந்தக் கூட்டணி கடந்த ஆட்சியில் செய்ததை விட இன்னும் வளமான ஆட்சியை வெளிப்படுத்தும் எனவும் மூன்று முறை ஆட்சியை கொடுத்தது மிகுந்த உத்வேகத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் கூறியதாகவும் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து மூன்று முறை பிரதமர் ஆன தலைவர் நரேந்திர மோடி எனவும் அப்படிப்பட்ட ஒரு மகத்தான சாதனையோடு தேசிய ஜனநாயக கூட்டணி ஏங்கி வருவதாக அவர் தெரிவித்தார்
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் எனவும் நம் அனைவருக்கும் தேவை எனவும் மக்களிடம் கருத்துக்கள் கேட்டு அதன் அடிப்படையிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் பரிந்துரைக்கப்பட்டதாகவும் இதை பல தலைவர்கள் வரவேற்றது எனவும் 2047 இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் எனில் ஒரே நாடு ஒரே தேர்தல் கட்டாயம் எனவும் அவர் தெரிவித்தார்

What do you think?

ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்

திருத்துறைப்பூண்டி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்