in

ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் புகுந்து அண்டா குண்டாக்களை திருடும் கும்பல்

ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் புகுந்து அண்டா குண்டாக்களை திருடும் கும்பல்

 

ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் புகுந்து அண்டா குண்டாக்களை திருடும் கும்பல் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை காந்தி நகரில் நேற்று ஆள் நலமா ஆட்டம் இல்லாத வீடு ஒன்றில் கணவன் மனைவி குழந்தையுடன் நான்கு பேர் உள்ளே புகுந்து அண்டா குண்டாக்களை திருடா முயற்சி செய்துள்ளனர்.

அப்போது அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டதும் தப்பித்து ஓடிச் சென்றுள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் உள்ளே சென்று வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அதே கும்பல் இன்று வடமதுரை பகுதியில் சுற்றித்திரிவதை பார்த்து பொதுமக்கள் தரும அடி கொடுத்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சேலம் பகுதியில் இருந்து இந்த கும்பல்கள் அதிக அளவில் வடமதுரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றித் திரிவதாக வந்த தகவலால் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்ச்சியாக வேடசந்தூர் தாலுகா முழுவதும் குற்றச் செயல் சம்பவம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என சமூக ஆர்வலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

குப்பை இல்லா கிராமம், மற்றும் பாலிதின் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

செல்லப் பிராணியான பூனைக்கு தடல் புடலான வளைகாப்பு விழா