in

ஜெகன்மோகன்ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதால் லட்டு பிரசாதம் கெட்டுவிட்டது சுப. வீரபாண்டியன் பேச்சு

ஜெகன்மோகன்ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதால் லட்டு பிரசாதம் கெட்டுவிட்டது சுப. வீரபாண்டியன் பேச்சு

 

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதால் லட்டு பிரசாதம் கெட்டுவிட்டது என்று ஒன்றிய அரசு திருப்பதி லட்டை வைத்து அரசியல் செய்கிறது எனவும், லட்டை உடைத்தால் அரசியலும் மதமும் தெரிகிறது என்று கும்பகோணத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேச்சு…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பேரூர் திமுக கழகம் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 75 ஆம் ஆண்டு பவள விழா முப்பெரும் விழா மாபெரும் பொதுக்கூட்டம் முன்னாள் எம். பியும் ஒன்றிய கழகச் செயலாளருமான செ.ராமலிங்கம் தலைமையில் திருநாகேஸ்வரம் கடை வீதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கூட்டத்தில் பேசியதாவது….

தமிழகத்திலேயே 75 ஆண்டுகளைக் கண்ட கட்சி திமுக என்றும் எத்தனை முறை பிளவுபட்ட போதும் எத்தனை பேர் பிரிந்து சென்றாலும் தள்ளாடாமல் தனியாக இயக்கமாக இருந்த ஒரே கட்சி திமுக என்றும்,

உங்கள் அனுபவத்திற்கு ஜெயலலிதாவை எதிர்க்கிறீர்கள் என்பதற்கு அரசியலில் நம் முன்னே யார் வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்று இப்படித்தானே அன்று ராஜாஜியும் காமராஜரும் நினைத்தார்கள் என்றும்,

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால் லட்டு பிரசாதம் கெட்டுவிட்டது என ஒன்று அரசு லட்டை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறது என்றும்,

லட்டை உடைத்தால் அரசியலும் மதமும் தெரிந்து விடும் என்றும்,

இதில் இன்னொரு கண்டுபிடிப்பு என்றால் ஜக்கி வாசுதேவ் லட்டு பிரசாதமே அல்ல என்றார் என்பது நாம் எப்படி நம்புவது எனவும் கூட்டத்தில் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் கும்பகோணம் எம்எல்ஏ க. அன்பழகன் அரசு தலைமை கொறடா கோவி செழியன் பேரூர் கழகச் செயலாளர் கும்பகோணம் துணை மேயர் சுப. தமிழழகன் தாமரைச்செல்வன் மற்றும் மாவட்ட பேரூர் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

Vettaiyan – The Hunter

தஞ்சை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்