தஞ்சை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம். இதனால் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பாதிப்பு
மேட்டூர் அணையிலிருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது, இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் வராததால், ராயமுண்டான்பட்டி, வெண்டயம்பட்டி, கடையக்குடி, கோட்டரப் பட்டி, தேவராயநேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கிளை வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன
இதனால் அப்பகுதியில் ஒரு போக சாகுபடியான சம்பா சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று வெண்டயம்பட்டி கிளை வாய்க்காலில் இறங்கி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சாலைகளில் சமைத்து உண்ணும் போராட்டத்திலும் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பூதலூர் தாசில்தார் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.