in

100 நாள் வேலையில் முறையாக சம்பளம் வழங்கவில்லை புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

100 நாள் வேலையில் முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறி புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

காலை 11 மணி ஆகியும் அலுவலகத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி சுவாமிநாதன் வராததால் ஆத்திரம் அடைந்து அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

அலுவலக ஊழியர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்திய கிராம மக்கள்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிளவாடிநத்தம் கிராமத்தில் கிராம மக்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கடந்த வாரம் 100 நாள் வேலை வழங்கப்பட்டது.

கடந்த வாரம் கிராம மக்களிக்கு 5 நாட்கள் வேலை வழங்கிய நிலையில் ஒரு நாளுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி சுவாமிநாதன் காலை 11:00 மணி ஆகியும் அலுவலகத்திற்கு வராததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் தொடர்ந்து நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யும் பொது மக்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டை எழுந்திருக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான வருகை பதிவேடை ஆன்லைன் முறையில் கொண்டு வந்ததே இத்தகைய சிக்கல்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.

What do you think?

H.ராஜாவை அவதூறாக பேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்