in

அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சிகோட்டை வரலாற்று அடங்கிய புத்தகத்தை அவர் வழங்கினார்

செஞ்சிக்கோட்டையினை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக தெரிவு செய்வதற்காக யுனெஸ்கோ குழுவினரின் வருகையை ஒட்டி பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு நிகழ்ச்சியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்து செஞ்சிகோட்டை வரலாற்று அடங்கிய புத்தகத்தை அவர் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டதில் செஞ்சிக்கோட்டை சுற்றுலாத்தலமாக உள்ளது.

செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசு யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது.

இதன் அடிப்படையில் இம்மாதம் 27ஆம் தேதி யுனெஸ்கோ குழுவினர் செஞ்சிக்கோட்டையை ஆய்வு செய்ய வரவுள்ளனர் இதற்கு முன்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பாரம்பரிய நடை 2024 விழாநடத்தி மாணவர்களை செஞ்சிக்கோட்டையை பார்வையிட செய்து அவர்களின் N கருத்துக்களையும் அனுபவங்களையும் பதிவு செய்தும்,

பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் கருத்து கேட்ப்பு நிகழ்ச்சியைபதிவு செய்து இந்த தொகுப்பை யுனெஸ்கோ குழுவினருக்கு காண்பிக்கவுள்ளனர்.

இதற்கான மூன்று நாள் பாரம்பரிய நடை 2024 விழாகடந்த 18ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்துபொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு நிகழ்ச்சி செஞ்சி கோட்டையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி தலைமை
தாங்கினார்.கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் அனைவரும் வரவேற்றார்.

தொல்லியல் மற்றும் வரலாற்று துறை சார்ந்த வல்லுநர்கள் கௌரி பிரதீப் சக்கரவர்த்தி ஆகியோர் செஞ்சிக்கோட்டையின் வரலாற்றை எடுத்துரைத்தனர்

நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கண்டு சிறப்புரை ஆற்றி செஞ்சிக்கோட்டையின் வரலாற்று புத்தகத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆரணி எம்.பி. தரணிவேந்தன்,விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர், விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன்,துணை ஆட்சியர் (பயிற்சி) பிரேமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி ஒன்றிய பெருந்தலைவர்கள் விஜயகுமார், கண்மணி நெறிஞ்செழியன், அமுதா ரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்,மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை,செஞ்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி,உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலை நன்றி கூறினார்.

What do you think?

அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு அலங்கார ஆராதனை

அரசு டாஸ்மாக் மதுபான கடையில் கடனாக மது கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர் கைது