in

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது – காவல்துறை ஆஜாக்கிரதையால் சிறையில் அடைக்க முடியவில்லை

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது – காவல்துறை ஆஜாக்கிரதையால் சிறையில் அடைக்க முடியவில்லை

இந்து மதத்தினரையும். இந்து மக்களையும் புண்படுத்தும் விதமாக பேசிய தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் காலநிலைய எல்லைக்குட்பட்ட அருள்மிகு சமயபுரம் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் பணிந்து வரும் மேலாளர் கவிராஜன் கொடுத்த புகாரில் நான் பணியில் இருத்த போது, இந்து மதத்தையும் இந்து கோவில்களை பற்றியும் தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி அவர்கள் இழிவுபடுத்துவதாக பக்தர்கள் பேசிக்கெண்டிருத்தனர்.

இதணை தொடர்ந்து எனது செல்போனை பார்த்தபோது IBC Youtube தளத்தில் உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் என இனிச்சர்களா என்ற தலைப்பில் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும் தற்சமயம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் அசைய பொருட்களான மீன் எண்ணெய்யும். மாட்டு கொழுப்பும் உள்ளதாக கூறப்படும் விவகாரம் அடங்குவதற்குள் தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பொய்யான செய்தியை தமிழ்திரைப்பட இயக்குநர் மோகன் ஜி 39/24, தகப்பனார் பெயர் குணசேகரன், பழைய வண்ணாரப்பேட்டை சென்னை-21 என்பவர் பேசியுள்ளார் .

அவர் மீது நடவடிக்ககை எடுக்கும்படி கவிராஜன் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மோகன் ஜி கைது செய்யப்பட்டு இன்று மாலை திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஜே எம் மூன்று நீதிபதி பாலாஜி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார் அப்பொழுது வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோகன் ஜி பேசிய சொற்கள் தவறாக இருந்தாலும் , காவல்துறையினர் அவரை கைது செய்ததற்கான உரிய காரணங்களை தெரிவிக்காததால் இந்த வழக்கிலிருந்து அவரை சொந்த பினையில் விடுவிப்பதாக நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்

இன்று காலை சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மோகன் ஜியின் இல்லத்தில் 8:20 மணிக்கு அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவருக்கு நேற்றே இன்று மாலை 3 மணிக்குள் சமயபுரம் காவல்நிலையத்தில் ஆஜர் ஆக வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டதாக காவல்துறையினர் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

தனக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என மோகன் ஜி நீதிபதி இடம் தெரிவித்தார். மேலும் தன்னிடம் நோட்டீஸ் நேற்றே வழங்கப்பட்டது போல் இன்று மாலை நீதிமன்றத்திற்கு வரும் வழியில் தன்னிடம் கையெழுத்து பெற்றதாக மோகன் ஜி நீதிபதி இடம் முறையிட்டார்.

இதனை அடுத்து நீதிபதி பாலாஜி காவல் துறையினரிடம் நோட்டீஸ் இன்று மாலை 3 மணிக்குள் சமயபுரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என மோகன்ஜி இடம் கொடுத்துள்ளீர்கள் என கூறி உள்ளீர்கள் அப்படி இருக்கும் பொழுது இன்று காலை 8:20 மணி அளவில் அவரது இல்லத்திற்கு சென்று அவரை கைது செய்தது ஏன், 3 மணிக்கு அவர் சமயபுரம் காவல் நிலையத்தில் ஆஜரான பின் அவரை நீங்கள் கைது செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் , மேலும் கைது செய்வதற்கான முறையான காரணங்களை நீங்கள் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி நீதிபதி பாலாஜி சொந்த ஜாமீனில் மோகன்ஜியை விடுவித்தார்.

இதனால் காவல்துறையினர் தலை கவிழ்ந்து கூனிக்குறுகி சென்றனர்.

What do you think?

பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்தார்

நாகையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்