in

வீடு புகுந்து நகை, கோவிலில் சிலை கொள்ளையடித்த 3 பேர் கைது

வீடு புகுந்து நகை, கோவிலில் சிலை கொள்ளையடித்த 3 பேர் கைது

 

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் வீடு புகுந்து நகை, கோவிலில் சிலை கொள்ளையடித்த 3 பேர் கைது தனிப்படை போலீசார் நடவடிக்கை.

தஞ்சாவூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன் நாகப்பட்டினம் சென்றார். அன்றைய தினம் மாலையில் எதிர்புறம் குடியிருந்துவருபவர் வீட்டின் முன் பக்கம் உள்ள கிரில் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு உண்டியல் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது.

இது குறித்து கலியமூர்த்தி தஞ்சை மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் உத்தரவுப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வெல்லக்குடி கவனைத் தெருவை சேர்ந்த குமரேசன் என்பவரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அதில் கலியமூர்த்தி வீட்டில் திருடியதை குமரேசன் ஒப்புக்கொண்டார்.

மேலும் அவருடன் இரண்டு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் சென்று பதுங்கி இருந்த கன்னியாகுமரி மாவட்டம் அலன்பரை, பாலன்விளை குன்னக்காடுவை சேர்ந்த வேல்முருகன் மற்றும் கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், ராபர்ட் சோன்பேட், இருதயபுரத்தை சேர்ந்த கேஜிஎபப் (என்ற) நாகராஜ் ஆகியோரை தனிப்படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் குமரேசன் மற்றும் வேல்முருகன் இருவரும் திருவாரூர் டவுன் காவல் நிலைய சரகத்தில் கோவில் பூட்டை உடைத்து அய்யப்பன் சிலையை திருடியுள்ளதும், மன்னார்குடி டவுன் காவல் நிலைய சரகத்தில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து லாக்கர்-ஐ திருடிச்சென்று, லாக்கரை திறந்து பின் அதனை திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஒரு ஏரியில் வீசிச்சென்றதும் தெரியவந்துள்ளது.

மேலும் வேல்முருகன் என்பவர் மீது கன்னியாகுமரி மாவட்டம் எரனியல், மண்டைக்காடு, கொளச்சல், எஸ்.டி குளம் காவல் நிலையங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலையம் ஆகியவற்றில் திருட்டு, கொள்ளை உட்பட 16 குற்ற வழக்குகளும், கர்நாடகா மாநிலத்தில் 2 திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள விபரமும், கேஜிஎப் (எ) நாகராஜ் என்பவர் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் 15 திருட்டு, வழிப்பறி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள விபரமும் தெரியவந்தது.

இதையடுத்து செய்யப்பட்ட கைது செய்யப்பட்ட குமரேசன், வேல்முருகன், கேஜிஎப் என்ற நாகராஜ் ஆகிய 3 பேரிடமிருந்து நகை, பணம், கார், மோட்டார் சைக்கிள், உள்ளிட்டவற்றை கைப்பற்றி மேலும் திருடப்பட்ட லாக்கரை ஆற்றில் வீசி இருப்பது தகவலில் தெரிய வந்ததை அடுத்து ஆற்றில் வீசப்பட்ட லாக்கரையும் போலீசார் மீட்டனர்.

What do you think?

நாகையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்

தருமபுரம் ஆதீன பள்ளி மாணவ, மாணவிகள் 74 பேர் பதக்கம் வென்று சாதனை