in

பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோயிலின் நாகர் சன்னதியில், சிறிதும் கலையாமல் சட்டையை உரித்து வைத்து சென்ற நல்ல பாம்பு.

பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோயிலின் நாகர் சன்னதியில், சிறிதும் கலையாமல் சட்டையை உரித்து வைத்து சென்ற நல்ல பாம்பு..

ஆச்சரியத்தில் பாலாபிஷேகம் செய்து சிறப்பு பூஜையில் ஈடுபட்ட பக்தர்கள்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பாவம் தீர்த்த பெருமாள் என்று அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பிரகாரத்தில் அமைந்துள்ள நாகர் சன்னதியில், நாகர் சிலையை சுற்றி நல்லபாம்பு ஒன்று, சிறிதும் களையாமல், தனது சட்டையை உறித்து வைத்து சென்றுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளதால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், வேண்டுவோருக்கு பாவங்கள் நீங்கும் தளமாக கருதப்படும் இந்த கோயிலில், நல்லபாம்பு சட்டையை அவிழ்த்து வைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த நல்ல பாம்பின் சட்டையை கண்ணாடி பெட்டியில் பிரேம் செய்து பக்தர்கள் பார்வைக்காக கோயிலில் வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

What do you think?

ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கியப்படி செல்லும் மாணவர்கள்.

தாமிரபரணி ஆறு தொடங்கும் இடத்தில் இருந்து ஆற்றை சுத்தம் செய்ய விரைவில் அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் பேட்டி.