in

ஊட்டச்சத்து மாதவிழாவில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை குறித்த விழிப்புணர்வு

ஊட்டச்சத்து மாதவிழாவில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை குறித்த விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் ஊட்டச்சத்து மாதவிழாவில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசின் கனவான ஊட்டசத்து மிக்க தமிழ்நாடு என்பதற்கேற்ப ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் திட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கவும், சமச்சீர் உணவை ஊக்குவிக்கவும், அனைவருக்கும் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து மாதம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் ஊட்டச்சத்து குறித்து நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், வழங்கினார்கள். மேலும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த

கண்காட்சியினை மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மருத்துவ அலுவலர் திருமதி.சான்றோ ரெய்ச்சல், ஊட்டச்சத்து நிபுணர் திருமதி.கரோலின் அவர்கள், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் திருமதி.அன்னலட்சுமி அவர்கள், புள்ளியியல் ஆய்வாளர் திரு.சம்சுதீன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

தாமிரபரணி ஆறு தொடங்கும் இடத்தில் இருந்து ஆற்றை சுத்தம் செய்ய விரைவில் அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் பேட்டி.

நாளொன்றுக்கு 1 லட்ச வரையிலான பயணிகள் மதுரை ரயில் நிலையத்தை பயன்படும் அளவிற்கு மறுசீரமைக்கப்பட்டு வருகிறது மதுரை எம்பி சு வெங்கடேசன் பேட்டி