in

காவலரின் பிடியில் இருக்கும் தனது மனைவியை மீட்டு தரும்படி ஆட்டோ டிரைவர் போலீஸ் கமிஷனரிடம் புகார்

காவலரின் பிடியில் இருக்கும் தனது மனைவியை மீட்டு தரும்படி ஆட்டோ டிரைவர் போலீஸ் கமிஷனரிடம் புகார்

மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தயாளன் மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கள்ள உறவில் தனது மனைவியை வைத்திருக்கும் காவலரின் பிடியிலிருந்து மீட்டு தரும்படி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,

மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன் வயது 38. இவரது மனைவி மீனாட்சி இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் தயாளன் வீட்டின் அருகே வசித்து வந்த தல்லாகுளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் செல்வராஜ். ஆட்டோ டிரைவர் தயாளன் குடும்பத்தினரோடு பழகி அவரது மனைவியிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து காவலர் செல்வராஜின் மனைவி பாரதி ஏற்கனவே புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆட்டோ டிரைவர் தயாளன் எனது மனைவி மீனாட்சி விட்டு விடுங்கள் என்று காவலர் செல்வராஜ் இடம் பேசியபோது தயாளனை செல்வராஜ் மிரட்டியுள்ளார்.

மேலும் உன் மனைவியை நான்தான் வைத்திருக்கிறேன் என்று ஆபாசமாகவும் பேசியுள்ளார். இது தெரிந்து தயாளன் தனது மனைவி மீனாட்சி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மீனாட்சி தயாளனுடன் வாழ முடியாது என மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு முடியும் தருவாயில் உள்ளதால் உன் மனைவிக்கு நீ விவாகரத்து கொடுக்க வேண்டும் என காவலர் செல்வராஜ் தயாளனை கஞ்சா கேஸ் போட்டு விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

எனவே காவலர் செல்வராஜின் பிடியில் உள்ள எனது மனைவியை மீட்டு தாருங்கள் என ஆட்டோ டிரைவர் தயாளன் கண்ணீர் மல்க மதுரை மாநகர காவல் ஆணையாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

What do you think?

மதுரையில் மறைந்த இசை மேதை S.P.பாலசுப்பிரமணியன் 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி பாடல்கள் பாடி, மலர் தூவி அஞ்சலி

தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாவக்கேடு எப்போது முடியும் என மக்கள் காத்திருக்கிறார்கள் யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேட்டி